கொள்ளவே செந்தூரந் தன்னையப்பா குறையாமல் களஞ்சியென்ற பொன்தகட்டில் மெள்ளவே புத்தீசல் இறகுபோல மேன்மையுடன் தான்தடவி செப்பக்கேளிர் வள்ளலுடன் காவிக்கால் தானுங்கூட்டி வளமான யெருச்சாம்பல் தன்னிற்சேர்த்து உள்ளபடி ரெண்டையுந்தான் ரேசித்தல்லோ வுத்தமனே தகடதனை வைக்கக்கேளே |