போதித்து வெகுகாலஞ் சென்றபின்பு பொங்கமுடன் வுள்ளுளவும் மிகவேயோதி சாதித்து வுபதேசங் கூர்ந்து மைந்தா சட்டமுடன் சின்மயத்திலிருந்துகொண்டு ஆதித்தன் சந்திரனு மறியாமற்றான் அப்பனே தன்மனதில் ஒடுக்கமாகி சாதித்து வாதமென்ற வித்தைதன்னை சட்டமுடன் கார்த்திருந்து சாதிப்பாயே |