| வண்மையாஞ் செம்பதனைத் தகடடித்து வளமைபெற பூங்காவி தன்னிலப்பா சண்டமாருதம்போல லவணஞ்சேர்த்து சட்டமுடன் நிம்பழத்தின் சாற்றாலாட்டி கொண்டபடி மேல்தனில் தகட்டிற்பூசி கொற்றவனே புடம்போட்டு யெடுத்துப்பாரு பண்டிடுவ கிருஷ்ணாவதாரனைப்போல் பட்சமுடன் துலங்கியது மின்னும்பாரே |