வன்பான கல்லதுவும் வெண்மையாச்சு வப்பனே திரவியங்கள் எடுக்கலாச்சு வென்றிடவே நீலாஞ்சனக் கல்லினாலே விருப்பமுடன் வையகத்தில் நிதியனைத்தும் குன்றான மலைபோலே எடுக்கலாகும் கொற்றவனே நீலமென்ற கல்லினாலே வென்றிடவே நவகோடி ரிஷிகளெல்லாம் வேகமுடன் கண்டறிந்து மறந்தார்தாமே |