பாரேதான் கோயில்தனை யிடித்தபேர்க்கும் பாங்கான வாலயத்தில் தீபந்தன்னை நேரேதான் விற்றல்லோ சிலைகள்தன்னை நேர்மையுடன் கொள்ளைகொண்ட துரோகிமார்க்கும் சீரான மடுக்கள் குளமடைத்த பேர்க்கும் சிறப்பான பண்டிதரைப் பழித்தபேர்க்கும் ஆரோதான் நடுச்சாம வழியிலப்பா அபகரித்து கொள்ளைகொண்ட கருமிகட்கே |