வருவாளே மோகமது கொண்டுமல்லோ மகத்தான நிதியனைத்து மீவாள்பாரு உருகியே மனமதுவும் மிகவும்வாடி உத்தமனே யுன்பின்னே துடறுவாள்பார் கருகியே முகம்வேர்த்து மனம்வேறாகி கட்டழகி பொன்மாது வருவாள்பாரு திருவினையாள் மனோன்மணியாள் முன்னேநிற்பாள் திரமுடனே அஷ்டசித்தி கைக்குள்ளாச்சே |