| கொள்ளவே முன்போல திராவகத்தாலாட்டு குவிந்தபின்பு நீர்குத்தி தவியிற்போடு அன்னவே தணலுக்குள் வறுத்துப்போடு அதிமாம் காசிபென்ற மேருக்கேற்றி தன்னவே வானுகையில் தீயைமூட்டித் தனையெடுத்து முன்போலப் பாவனைசெடீநுது துன்னவே ஏழுதரம் தீர்ந்தாயானால் சூரியன்போல் வந்திருக்கும் சாரம்தானே |