நினைக்கிறேன் ஸ்ரீலீலாவினோதந்தன்னை நிலையான கருமான மேதென்றாக்கால் கனையான மலையோரந் தேடிப்போனால் சுருக்கான வாத்தலரி வேர்தானுண்டு தினைபோலே வித்துள்ள மலைதாங்கியப்பா சிறப்பான திருநீற்று சூலியாகும் பனைபோன்ற வேரதனை வெள்ளிதன்னில் பட்சமுடன் காப்பதுவுங் கட்டிடாயே |