சென்றேனே விலாடநகர்பதியிலப்பா செம்மலுடன் மாண்பருட வதிசயங்கள் கஉன்றான மலைபோலே கோடியுண்டு கொற்றவர்கள் பஞ்சவரின் சேனைகண்டேன் வென்றிடவே மூலபலயுத்தந்தன்னில் வெகுகோடி மாண்பரெல்லாம் மடிந்தாரங்கே அன்று திரியோதிரனார் சேனைவர்க்கம் அவ்வனத்தில் சமாதிபதி கண்டிட்டேனே |