தீரவே சமாதியிடஞ் சென்றேன்யானும் திரள்வீரர் பஞ்சவர்கள் போர்க்களத்தை சோரமெனும் வீராதி வீரர்தாமும் சொற்பெரிய அரண்வாயல் அரக்குக்கோட்டை நேரமுடன் குளிகையது கொண்டுயானும் நெடுந்தூரம் பாஞ்சாலன் பதியின்மட்டும் சேரவே சென்றல்லோ வெற்றிகொண்டேன் ஜெயமான சமாதியிங் காவலுண்டே |