கேட்கவே யடியேனும் பிரமைகொண்டு கெவனமுடன் காலாங்கிசீஷனென்றேன் மீட்கவே யடியேனுங் குளிகைபூண்டு மேதினியெலாம் சுற்றியிங்கேவந்தேன் காட்கவே விலாடபுரங் காணவென்று தகமையுடன் போர்களத்தில் வந்தேனப்பா ஆட்கொண்டு யெந்தனையு மாசீர்மித்து வன்புடனே பாதுகாக்க வென்றிட்டேனே |