உண்டான புலிப்பாணி மைந்தாபாரு உத்தமனே இன்னமொரு மார்க்கஞ்சொல்வேன் கண்டதொரு வையகத்தில் விருட்சந்தன்னில் காலாங்கி நாதரவர் அறிந்தமட்டும் அண்டமதில் ஆகாயதேவரெல்லாம் வன்புடனே யுகந்துகொண்ட விருட்சந்தன்னை சண்டமாருதம்போல விருட்சந்தன்னை சாற்றுகிறேன் புலிப்பாணி மைந்தாபாரே |