எட்டான மங்களமும் இருக்கவேண்டும் எழிலான பேறுபதினாறுவேண்டும் மட்டான கனமெட்டும் இருக்கவேண்டும் மகத்தான விளையாட்டும் எட்டுவேண்டும் திட்டமாஞ் சேனைதுகை பத்தும்வேண்டும் திகழான புங்கசித்தி யெட்டும்வேண்டும் வட்டமுடன் போகமது யெட்டும்வேண்டும் வளமான ராஜர்களுக் குகந்தவாறே |