கண்டேனே ராஜாதிசக்கரவர்த்தி காசினியில் நானிருந்த நாட்கள்மட்டும் உண்டான சக்கரவர்த்தி பதினாறுகண்டேன் ஓகோகோ நாதாக்கள் சொன்னதில்லை அண்டபுவனங்களெல்லாம் கண்டராஜர் அவனிதனில் இவர்போலுஞ் சித்துமுண்டோ தண்டவன ரிஷிகளெல்லாஞ் சித்துதாமும் தாரணியில் மறைத்தாரே கோடியாமே |