| கண்டாரே சித்துமகா ரிஷியார்தாமும் கருத்தாக எந்தனைத்தான் கண்டபோது திண்மையுடன் யாரென்று என்னைக்கேட்க தீர்க்கமுடன் காலாங்கி சீஷனென்றேன் வண்ணமுடன் தாள்பணிந்து வடியேன்தானும் வளமாக சிரங்குனிந்து தெண்டனிட்டேன் கண்ணபிரான் தன்னைப்போல் ரூபங்கொண்ட கர்த்தாவும் எந்தனையும் மதித்திட்டாரே |