ஓதவென்றால் புலிப்பாணி மைந்தாகேளு வுத்தமனே சத்துரு மாரணந்தான்சொல்வேன் நீதமுடன் சத்துருவின் பிரணவத்தை நிகட்சியுடன் யாரறிவார் வுலகில்மாண்பர் தோதமுடன் கருவாளி காண்பான்பாரு தொல்லுலகில் மற்றவருங் காணமாட்டார் நாதமென்ற மனோன்மணியாள் கிருபையாலே நாதாந்த சித்தொளிவுங் காண்பான்பாரே |