| தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தண்மையுள்ள புலிப்பாணி மைந்தாபாரு கோனான மாரணத்தால் மடிந்தோர்தம்மை கொற்றவனே எழுப்புதற்கு மார்க்கஞ்சொல்வேன் தேனான மனோன்மணியாள் பாதம்போற்றி செப்புவேன் மாணாக்கள் பிழைக்கவென்று பானான சாத்திரத்தின் யுயிரெழுத்தை பாருலகில் பாடுகிறேன் பண்பாடீநுத்தானே |