சித்தென்றால் சித்துயிது என்னசொல்வேன் சீர்பாலா புலிப்பாணி மைந்தாகேளு புத்தியுள்ள பூபாலா புனிதவானே பூவுலகில் இருந்ததொரு குதம்பைசித்து பத்தியுடன் பெண்ரூபங்கொண்டசித்து பாருலகில் வெகுநாளாடீநு இருந்தார்தாமும் சுத்தியுடன் தேவதாபூசையோடும் சுந்தரனே வெகுகால மிருந்தார்தானே |