தானான போகரிஷி மார்க்கஞ் சொல்வேன் தயவான புலிப்பாணி மைந்தாகேளு கோனான யெனதையர் காலாங்கிநாதர் குறிப்புடனே எந்தனுக்குச் சொன்னநீதி பானான வயததுவும் முந்நூரென்று பான்மையுடன் எந்தனுக்கு உபதேசித்தார் தேனான குளிகையது பூண்டுகொண்டு தேசமெலாஞ் சுற்றிவந்தேன் காலந்தானே |