| பாரப்பா புலிப்பாணி பாலனான பட்சமுடன் உந்தனுக்கு வயதுசொல்வேன் ஆரப்பா வயததுவும் அறுநூறாண்டு வப்பனே வையகத்திலிருந்தசித்து நேரப்பா சமாதிமுகஞ் சென்றதில்லை நேர்மையுடன் நெடுங்கால மிருந்தசித்து சீரப்பா சிவயோகந் தன்னிற்சென்று சிறப்புடனே சின்மயத்தி லிருந்தசித்தே |