| உண்டாச்சு சித்துமுனி பாலனுக்கு வுற்றதொரு நந்திமுகந்தாமாச்சு கண்டதொரு மாண்பரெல்லாம் ஆலயத்தில் கருத்தினிலே முன்னின்ற நந்தியென்று அண்டர்முனி ராட்சதரும் ரிஷிகள்தாமும் அந்தரதுந்துபிமுதலுந் தேவரானோர் மண்டலத்தில் தேவதா ஸ்தலங்கள்தன்னில் மகத்தான நந்தியென்று மதித்திட்டாரே |