மதிக்கவே இன்னமொரு மார்க்கங்கேளு மகத்தான புலஸ்தியரின் வண்மைசொல்வேன் துதிக்கவே வகஸ்தியனார் வாசம்பெற்ற துடியான புலஸ்தியனார் என்னலாகும் விதிப்படியே கமலமுனி கோத்திரத்தில் வித்தகராடீநு வந்துதித்த முனிவர்தாமும் கதிபெறவே யகஸ்தியனார் பாகம்பெற்று காசினியில் வந்துதித்த சித்துமாச்சே |