சித்தான சித்துமுனி ரிஷிகள் தாமும் சிறப்பான கொங்கணவர் காண்டஞ்சொல்லி முத்தான கடைக்காண்டம் மூன்றுஞ்சொல்லி மூதுலகில் சமாதிக்கு ஏகலானார் பத்தியுடன் கடைக்காண்டம் நூலிலப்பா பாடிவைத்தார் வெகுசங்கைக் காணப்போமோ புத்தியுள்ள மாண்பர்களும் காண்பாரப்பா கண்டாலும் மதிசங்கை யின்னமுண்டே |