உண்டான கடைக்காண்டம் பாடியல்லோ வுத்தமனுங் கொங்கணவர் முனிவர்தானும் நண்பான வையத்தில் மாண்பர்முன்னே நலமான ரிஷிமுனிவர் தனையழைத்து வண்பான சாத்திரங்கள் பாடியல்லோ வளமுடனே வெகுசித்தர் மறைத்துவைத்தார் திண்ணமுடன் காயாதி கற்பங்கொண்டு தீரமுடன் சமாதிக்குச் சொல்வேன்தானே |