பாரேதான் நீலகண்ட ரிஷியார்தம்மால் பாருலகில் உபதேசம் பெற்றசித்து நேரேதான் சமாதிமுகந் தன்னிற்சென்று நேர்மையுடன் இருபத்தோர் ஆண்டுமட்டும் தீரேதான் சமாதிமுகம் இருந்துமல்லோ தீர்க்கமுடன் வையகத்தில் வந்தசித்து பேரேதான் நூல்தனிலே யூகியென்றும் பேருலகில் கீர்த்திபெற்ற சித்துதாமே |