| தாமான சாத்திரங்கள் அழிந்தசித்து தாரிணியில் நெடுங்கால மிருந்தசித்து கோமான்கள் உபதேசம் பெற்றசித்து குவலயத்தில் இவர்போலும் யாருமுண்டோ பூமான்களானதொரு மாண்பரெல்லாம் புகடிநச்சியுடன் இவர்பாதம் புகழுஞ்சித்து சாமான்யமானதொரு சித்துபோல சட்டமுடன் வையகத்திற் காணார்தாமே |