சித்தான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் திரளான நவகோடி ரிஷிகள்தன்னில் புத்தியுள்ள தன்வந்திரி பகவான்தானும் பூபாலரானதொரு மாயாசித்து சத்தியுள்ள மகாவிஷ்ணு வென்றேசொல்வார் தாரிணியில் மானிடமாஞ் சித்துவாகும் முத்திபெற வைப்பசியாந் திங்களப்பா முனையான புனர்பூசம் நாலாங்காலே |