அறையவே யின்னமொரு வயணஞ்சொல்வேன் வன்பான கண்மணியே சொல்லக்கேளிர் நிறையவே சிவவாக்கியர் பிறந்தநேர்மை நீதியுடன் சொல்லுகிறேன் நிறைவாடீநுக்கேளு குறையாத தைமாதம் மகத்திலப்பா கொற்றவனே ரெண்டாங்கால் என்னலாகும் மறையவே திருமூல கூட்டத்தாரில் மகத்தான கன்னியது பிள்ளையாமே |