பண்பான யின்னமொரு மார்க்கம்பாரு பாலகனே ஐந்தறிவிற் சிறந்தபாலா திண்பான புஜண்டருட மார்க்கஞ் சொல்வேன் தீர்க்கமுடன் பங்குனியாந் திங்களப்பா கண்பான வுத்திரமாம் இரண்டாம்பாதம் காசினியில் வந்துதித்த திருவுமாச்சு மண்பான வரரிஷியின் சாபத்தாலே மார்க்கமுடன் அவதரித்த பாலனாமே |