பாலனாஞ் சந்திரகுலம் விளங்கவந்த பாரினிலே வெள்ளாட்டி பெற்றமைந்தன் மாலான ரதிகேளி மடந்தையாகும் மகத்தான வருந்துதியு மென்னலாகும் சேலான பாக்கியமும் பெற்றபாலன் செம்மலுடன் சாபத்தால் வரத்தில்வந்து தாலான தவசியென்ற நாமம்பெற்று தாரிணியில் புஜண்டரென்ற பேருண்டாச்சே |