| சித்தான யின்னமொரு மார்க்கம்பாரு சீருள்ள புலிப்பாணி மைந்தாகேளு புத்தியுள்ள புலஸ்தியனார் பிறந்தநேர்மை பூதலத்தில் எவராலும் கூறப்போமோ முத்திதரும் ஆவணியாந் திங்கள் தன்னில் முனையான அனுஷமாம் நாலாங்காலில் பத்தியுடன் பிறந்தாரே புலஸ்தியர்தானும் பாரினிலே வந்துதித்த வுருவுமாச்சே |