| அறையலாம் இன்னமொரு மார்க்கம்பாரு வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு நிறையனே வேதமென்ற வியாசர்தானும் நேர்மையுடன் தான்பிறந்த சேதிவண்ணம் மறைபோன்ற வாணியாந் திங்களப்பா மகத்தான கேட்டையது ரெண்டாங்கால்தான் குறைபோன்ற நாளதனில் உதித்தபாலன் கொற்றவனார் வேதமென்ற வியாசர்தானே |