ஆச்சப்பா யின்னமொரு மார்க்கஞ் சொல்வேன் வப்பனே புலிப்பாணி மைந்தாகேளு மூச்சடங்கிப் போனதொரு மாயாசித்து முனையான தட்சணாமூர்த்தியாகும் பாச்சலுடன் தட்சணப்பதியில்தானும் பாங்குடனே பள்ளிகொண்ட சித்துவாகும் ஆச்சரியமானதொரு மாயாசித்து அவர்பிறந்த வண்மைதனைப் புகலுவேனே |