| தம்பியென்று சாத்திரங்கள் சொல்லலாச்சு சதகோடி வடிவேலர் சித்துதன்னை வெம்பியதோர் மாந்தருக்கு ரோகந்தீரும் வெட்டவெளி வடிவேலரென்றே சொல்வார் கும்பியே மனங்கொதித்து வந்தபேர்க்கு கோடான கோடிபொருள் ஈவாரப்பா தம்பியே எந்தனுக்கு குருவுமாகும் தாக்கான வடிவேலர் தண்மைபாரே |