தானான யின்னமொரு மார்க்கஞ்சொல்வேன் தகமையுள்ள புலிப்பாணி மைந்தாகேளு கோனான யெனதையர் காலாங்கிநாதர் கொற்றவனார் தாமிருக்குங் காலந்தன்னில் பானான வையகத்து மாண்பரெல்லாம் பதிகெட்டு மதிகெட்டு குறிகள்கேட்டு தேனான மனோன்மணியை மறந்துமல்லோ தீர்க்கமுடன் மூடவழி சென்றார்பாரே |