சொல்லவே சத்தகன்னி ஜங்கன்தானும் சுத்தமுடன் சமுசாரி மாண்பன்கேட்டு வெல்லவே தன்தேவி தனையழைத்து விருப்பமுடன் இன்றுமுதல் நீயுமேதான் புல்லவே சத்தகன்னி ஜங்கன்தானும் புகழாக வாக்குரைத்த தன்மைபோலே நல்லதோர் இருபத்தோர் வாரமட்டும் நலமுடனே பதிமுகத்தில் செல்வீர்தாமே |