தேனேகேள் லாடகவி யனேகஞ்சொல்வார் தாக்கான பரிபாஷை மிகவுஞ்சொல்வார் மானேகேள் சன்னதங்கள் மிகவுண்டாகி மார்க்கமுடன் திரேகமது நடுக்கல்கண்டு தேனேகேள் சிதாபாச நிலையில்நின்று தீர்க்கமுடன் வதிதங்கள் மிகவுரைப்பார் தானேதான் தெடீநுவமது கொண்டாற்போலே தகமையுடன் பலபிரட்டு பேசுவாரே |