| நூலான நூலுக்குள் மார்க்கஞ்சொன்னேன் நுட்பமுடன் மார்க்கமது என்னவென்றால் பாலான சித்தருக்கு நீதிசொன்னேன் பாங்குடனே யனீதவழி விதியுஞ்சொன்னேன் சேலான சன்மார்க்கந் துன்மார்க்கந்தான் செப்பினேன் கடைக்காண்டமேழினுள்ளே மாலான மகுத்துவங்கள் சொல்லொண்ணாது மகத்தான நீதிவழி பாடுகாணே |