வணங்கியே நூலதனைப் பதனம்பண்ணு வகையில்லா கசடருக்கு யீயவேண்டாம் சுணங்கமெனுங் கழுதையப்பா மாண்பர்தாமும் சுந்தரனே வெகுபேர்கள் இருப்பாருண்டு கணமுடைய ராட்சதர்கள் தன்னைப்போல கருமிகளும் மெத்தவுண்டு யீயவேண்டாம் மனங்கமழும் புண்ணியர்கள் தன்னைத்தேடி மகத்தான நூல்கொடுத்தால் புனிதமாமே |