| காணாரே யவ்வனத்தில் மகிமைதன்னை கதையுரைப்பேன் புலிப்பாணி மன்னாகேளு தோணாமல் சித்தர்முனி ரிஷிகளுக்கும் தொல்லுலகில் கண்டறியா வதிசயங்கள் நாணாது சிங்கமென்ற காட்டகத்தை நன்மையுடன் குளிகைகொண்டு சென்றுயானும் வீணாகக் காலமது கழியாமற்றான் விருப்பமுடன் சிலகாலமிருந்திட்டேனே |