கீழான மிருகமது வனேகமுண்டு கீர்த்தியுள்ள சிங்கமது ராசனப்பா பாழான காடுகளில் இருக்கும் சிங்கம் பார்த்தவர்கள் ஆரேனும் கண்டதுண்டோ சாழலுடன் கானாறுதன்னிலப்பா சட்டமுடன் விழுந்திறந்த கதைகேட்டார்கள் ஆழான மடுக்களிலே விழுந்திறந்த அதிசயங்கள் வையகத்தில் கண்டார்தாமே |