பாரேதான் சீனபதி மாண்பருக்கு பாங்கான கற்பமுறை யானுஞ்சொல்லி நேரேதான் பிழைப்பதற்கு வழியுஞ்சொன்னேன் நேர்மையுடன் கருவாளி கண்டுகொள்வார் சீரேதான் சித்தர்முனி மார்க்கந்தன்னை சிறப்புடனே யானுரைத்தேன் மாண்பருக்கு வேரேதான் மற்றோரால் சொல்லப்போமோ வேதாந்த காலாங்கி கடாட்சந்தானே |