சத்தமது கொண்டிடவே யானைதானும் சதுரான மலைதனிலே கேட்கும்போது முத்திபெறும் சித்தர்களின் கூட்டத்தார்கள் முனையான சத்தமதைக் கேட்டுமேதான் புத்தியுடன் யானையது தன்னையல்லோ புகழான வுச்சிலிங்கத் தேள்தானப்பா வெத்தியுடன் கொட்டியதோர் தேள்தானென்று வீரமுடன் சித்தர்களும் அறிந்திட்டாரே |