வார்த்துடனே யெள்ளெண்ணை ரெண்டுசேரு வாகாக வுதுவெல்லாம் அயச்சட்டிலிட்டு பேர்த்துடனே அடுப்பேற்றி யெறித்துமெள்ளப் பொங்காமல் தயிலமென்ற பதத்தில்வாங்கு சேர்த்துடனே யரப்பொடிதான் பலமும்நாலு திறமான காந்தத்தால் எடுத்துக்கொண்டு ஏர்த்துடனே பீங்கானில் பொடியைப்போட்டு இதமாகத் தயிலத்தில் பிசறிவையே |