போமென்று சொல்லியல்லோ முனிவர்தானும் பொங்கமுடன் கோனானுக்குறுதிகூறி நாமென்ற காலாங்கி வாக்குபோலே நலமுடனே ஞானோபதேசஞ்செடீநுது தாமென்ற பிரிதிவியாஞ் சாம்பல்தன்னை சட்டமுடன் தான்கொடுத்து மதியுஞ்சொல்லி வேமென்ற காட்டகத்தே சித்தர்தாமும் வேகமுடன் குகைதனிலே சென்றிட்டாரே |