நண்ணியே யேகாந்த கூட்டந்தன்னில் நலமுடனே தானிருக்கும் வேளையப்பா திண்ணமுடன் கிரிதனிலே இருந்தசித்து தீர்க்கமுடன் மாண்பருட கூட்டந்தன்னில் தண்மையாடீநு பொதிமாட்டுக் காரர்தன்னை தகமையுடன் சித்துமுனி யருகிற்சென்று உண்ணவே புகையிலையின் கற்பமப்பா வுத்தமனே எனக்கருளு மென்றிட்டாரே |