வந்திப்போம் உம்மையொரு குருவாயெண்ணி மகத்தான நாதாக்கள் நீர்தானென்றும் சிந்திப்போம் சதாகால மர்ச்சித்தேதான் சீருடனே சின்மயத்தை மனதிலுன்னி எந்நாளுங் கிரிவாழும் பதாம்புயத்தை எழிலான சர்குருமை மெடீநுக்குருவென்றெண்ணி பந்நியே கிரிதனிலே மாண்பரெல்லாம் பாங்குடனே சதாநித்தம் அர்ச்சிப்போமே |