சொல்லவென்றால் இன்னமொரு மார்க்கங்கேளு தூயதான வசளையென்ற மூலிமார்க்கம் புல்லவே கறுவாளைக் கொண்டுவந்து புகழான முப்பூவுங்கூடச்சேர்த்து கொல்லவே தாம்பரமாந் தகட்டின்மேலே கொப்பெனவே முப்பூவை மத்தித்தேதான் மெல்லவே தகட்டின்மேல் பூசியேதான் மேன்மையுடன் கோழியென்ற புடத்தைப்போடே |