சுருதியாம் மூலியுட வேகந்தன்னை சுந்தரனே என்னசொல்வேன் மச்சகேந்திரா நிருதியாங் காடெல்லாந் திரிந்தாலுந்தான் நிஷ்களங்கமானதொரு மூலிதன்னை குருதியா மூலிநிறமேயாகும் குவலயத்தில் கண்டவர்கள் விள்ளாரப்பா பருதிமதி காணாத விருட்சத்தின்கீடிந படர்ந்துமே தானிருக்கும் மூலியாமே |