உண்டான மனோலயத்தை யறிந்துகொண்டு வுத்தமனே நூல்பார்த்த வாதியுண்டு கண்டாலும் விள்ளாத காணியாளர் கசடகற்றி மனம்பொருந்தி கருத்திலுன்னி அண்டர்முனி தேவாதி ரிஷிகட்கொப்பாடீநு வப்பனே முற்பவத்தை யகற்றிவாழும் சண்டமெனும் மாருதம்போல் பாசம்விட்டு சட்டமுடன் வாழுகின்ற யோகியாமே |